எதுவும் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை கிளப்புவதே காங்கிரஸூக்கு வழக்கமாக உள்ளது.. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

 
ஹர்தீப் சிங் பூரி

எதுவும் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை கிளப்புவதே காங்கிரஸூக்கு வழக்கமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றம் சாட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், எதுவும் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை கிளப்புவதே காங்கிரஸூக்கு வழக்கமாக உள்ளது என்று காங்கிரஸை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றம் சாட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டிவிட்டரில், எதுவும் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை கிளப்புவதே காங்கிரஸூக்கு வழக்கமாக உள்ளது. குடியரசு தலைவர் நாட்டின் தலைவராக இருக்கும்போது, பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருக்கிறார் மற்றும் அரசாங்கத்தின் சார்பாக நாடாளுமன்றத்தை வழிநடத்துகிறார். அரசாங்கத்தின் கொள்கைகள் சட்டங்களின் வடிவத்தில் செயல்படுத்தப்படுகின்றன. குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லை, அதேசமயம் பிரதமர் இருக்கிறார் என்று பதிவு செய்து இருந்தார்.

அகமது படேல் விவகாரம்… மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணம்.. மனிஷ் திவாரி

மத்திய அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி பதிலடி கொடுத்துள்ளார். மணிஷ் திவாரி டிவிட்டரில், அரசியலமைப்பின் 79வது பிரிவில், குடியரசு தலைவரை கொண்ட மத்திய அரசாங்கத்துக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும், இரண்டு அவைகள் முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் இந்திய அரசியலமைப்பை மிகவும் கவனமாக படிக்க வேண்டும் என்று பதிவு இருந்தார்.