பப்ஜி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது BGMI கேம்..

 
PUBG

இந்தியாவில் விரைவில் பப்ஜி  விளையாட்டு மீண்டும்  பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகளவு விளையாடப்பட்டு வந்த  பப்ஜி கேம்,  உட்பட பல்வேறு சீன செயலிகளுக்கு இந்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு  தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பப்ஜி கேமுக்கு மாற்று எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் இருந்து வந்தது. பின்னர் ஃப்ரீ ஃபையர் உள்ளிட்ட மற்ற செயலிகளின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியது. 

pubg

இத்தகைய  சூழலில் தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பு நிறுவனமான கிராஃப்டான், Battlegrounds Mobile India (BGMI) என்ற கேமை வடிவமைத்தது. இதனை கடந்த 2021 ஜூலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்தது.  இதனை  புதிய பப்ஜி வெர்ஷன் என பலரும் சொல்லி வந்தனர். அத்துடன் பலரும் ஆர்வமுடன் டவுன்லோடு செய்து விளையாட தொடங்கினர்.   இந்த செயலி கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக  கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள்  ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இந்த கேமை மீண்டும் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.  

இந்தச் சூழலில் BGMI இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டு வர உள்ளது. இதுகுறித்து அறிவித்துள்ள கிராஃப்டான்  நிறுவனம்  தங்களது செயல்பாடுகளை தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளது.  இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் இந்த கேம் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.  பப்ஜிக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட இந்த கேம் மீண்டும் பய்ன்பாட்டுக்கு வர உள்ளது கேம் பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.