ராமர் கோவில் கும்பாபிஷேக விழா - மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

 
Ramar

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக்க விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கின. மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறவிகள், பிரபலங்கள் என நாடு முழுவதும் 7,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து 100-க்கும் மேலான சிறப்பு பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.