சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் டெல்லியில் ஆலங்கட்டி மழை

 
hailstorm in delhi

தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் திடீர் ஆலங்கட்டி மழை பெய்ததால் கோடை வெயில் சற்றே தணிந்தது.

Delhi rain hailstorm NCR noida ghaziabad latest news photos videos | India  News – India TV

தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சமீப வாரங்களாக டெல்லியில் பகல் நேரத்தில் 45 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெயிலும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வரும் நிலையில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


இந்த நிலையில் இன்று பிற்பகலில் டெல்லியின் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டமாக காணப்பட்டது.  திடீரென்று ரோகினி, பிதாம்புரா மற்றும் பஸ்சிம் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கடுமையான வெப்பம் அந்த பகுதிகளில் சற்றே தணிந்து இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. வெப்பசலனம்  காரணமாக மழை பெய்ததாகவும் என்றும் முழுவதும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து வரக்கூடிய சில நாட்களில் படிப்படியாக வெப்பநிலை உயரும் எனவும் ஆனால் அனல் அலை காற்று இருக்காது எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.