காலையிலேயே வியாபாரிகள் மீது துப்பாக்கிச்சூடு! ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் பழைய நாணய வியாபாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள ராயசோட்டி மண்டலம் மாதவரத்தில் இன்று காலை பழைய நாணய வியாபாரிகள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரமணா (30), அனுமந்த் (50) ஆகியோர் என்று தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந்த இருரையும் மீட்டு ராயசோட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள ராயசோட்டி போலீசார் துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் போட்டி காரணமாக ரமணா, அனுமந்த் ஆகியோரை கூலிப்படையை நியமித்து போட்டி பழைய நாணய வியாபாரிகள் கொலை செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது.