வெறும் கீரல் தானே என அலட்சியம்- ரேபிஸ்க்கு காவல் ஆய்வாளர் பலி

 
s

நாய்க்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டிருந்தும், நாயின் கால் நகம் கீறியதால் ரேபிஸ் தாக்கப்பட்டு  இன்ஸ்பெக்டர் ஒருவர் குஜராத்தில் உயிரிழந்திருக்கிறார். 

ரேபிஸ் பாதிக்கப்பட்டவர்


குஜராத்தில் 5 நாட்களுக்கு முன் வளர்ப்பு நாயின் நகம் உடலில் கீறியதில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியா உயிரிழந்தார். அகமதாபாத்தை சேர்ந்த அவர், நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக்கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியான உடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். 

நாய் கடித்தால் அல்லது கீறினால் ஏற்படும் லைசாவைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸால் ரேபிஸ் ஏற்படுகிறது . இந்த வைரஸ் மூளை மற்றும் நரம்புகளைத் தாக்குகிறது. காய்ச்சல், பதட்டம், குழப்பம், விழுங்குவதில் சிரமம் அல்லது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். நாய் பல் பட்டாலோ அல்லது நகத்தால் கீறினாலோ அல்லது நக்கி வைத்தாலோ உடனே 15 நிமிடம் சோப்பு அல்லது டெட்டால் போட்டு நன்கு அந்த இடத்தை ஓடுகிற நீரில் கழுவி, உடனடியாக  சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.