``GST வரிவிகித மாற்றம்“ - நிர்மலா சீதாராமன்

 
மக்களின் கைகளில் பணம் புரளும்-நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி பதிவு நடைமுறையில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறையும் எளிதாக்கப்படும்.

GST काउंसिल की बैठक में...- India TV Hindi


டெல்லியில் நடைபெற்ற 57ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வணிகங்களை எளிதாக்கும் நோக்கில் (Ease of Doing Business) பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

GST வரிவிகித மாற்றம்: ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்

கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தனிப்பட்ட கைது அதிகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தண்டனைகள் தொடர்பான முடிவுகள் இனி நீதித்துறையின் பரிசீலனைக்கு விடப்படும். 

குற்றவியல் வழக்கிற்கான உச்ச வரம்பு உயர்வு: குற்றவியல் வழக்கு (Prosecution) தொடர்வதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 கோடிக்குக் கீழ் உள்ள முறைகேடுகளுக்கு குற்றவியல் வழக்குகள் பாயாது.

பொதுவான அபராதம் குறைப்பு: குறிப்பிட்ட அபராத வரம்பு இல்லாத விதிமீறல்களுக்கான பொதுவான அபராதம் ரூ.25,000 இலிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச நோட்டீஸ் வரம்பு: ரூ.10,000 மற்றும் அதற்குக் குறைவான தொகையுடைய வரி நிலுவைகளுக்கு புதிய நோட்டீஸ்கள் அனுப்பப்படாது என்றும், ஏற்கனவே நிலுவையில் உள்ளவை திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'ஜிஎஸ்டி 2.0' (GST 2.0) சீர்திருத்த பரிந்துரைகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.