மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்..

 
 பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் - இஸ்ரோ

என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வரும் 29ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து  விண்ணில் செலுத்தி வருகிறது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில்  இருந்து இந்த ராக்கெட்டுகளில்  செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.  அந்தவகையில்  ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட்டை  இஸ்ரோ  வரும் 29ம் தேதி  விண்ணில் செலுத்துகிறது.  என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை  இந்த ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்புகிறது.

மே 29ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.  நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைக்கோள் இதுவாகும்.  இதனைத்தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3-வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவவும் இஸ்ரோ திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இலக்கை எட்ட, விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை தொடர்ந்து முன்னேறி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.