கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்தியா முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இது தற்காலிக தீர்வு தான் என்று கூறும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதே நிரந்தர தீர்வு என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதால் சொற்ப அளவிலான மக்களே முன்வருகிறார்கள்.

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இதனால் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே நகர்கிறது. 136 கோடி மக்கள்தொகையில் ஜனவரி மாதமே தொடங்கப்பட்ட இப்பணியில் இதுவரை 18 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டிருக்கின்றன. இது ஒருபுறம் என்றால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரத்த உறைவு ஏற்படுவதாகவும், சிலர் உயிரிழந்து விடுவதாகவும் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன.

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

வாட்ஸ்அப்களில் பரவும் இந்த வதந்திகளால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் கொரோனாவை விலை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள். தடுப்பூசி குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் அதிகமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் குழு!

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நோய்த்தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழு (Adverse Events Following Immunisation) ஆய்வில் இறங்கியது. தற்போது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 753 மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது. 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் அரிதாகவே ஏற்படுகிறது என கூறியிருக்கிறது.