இலவச தானிய திட்டம் மார்ச் வரை நீட்டிப்பு - மத்திய அரசு முடிவு!

 
இலவச உணவு தானிய திட்டம்

இந்தியாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் கொரோனா பரவல் உச்சம் பெற்றது. மார்ச் மாதம் நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் உணவு இல்லாமல் அல்லல்பட்டனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்கள் ஊருக்குச் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

pmgkay: இலவச உணவுத் திட்டம்: 15 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்! -  15.30 lakh metric ton free food grains given to states and uts under pmgkay  | Samayam Tamil

அதற்குப் பின்னர் தான் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி ரேஷன் கடைகள் மூலமாக 80 கோடி பேருக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு தானிங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

Governor reshuffle, new Ministry clear decks for Cabinet expansion | India  News,The Indian Express

ஆனால் இந்தத் திட்டத்தை நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கும் எண்ணம் இல்லை என மத்திய உணவுத் துறை சமீபத்தில் அறிவித்தது. நாடு கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிப் பாதையில் செல்வதால்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகளும் மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இச்சூழலில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் திட்டத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.