"அனைவரும் பாதுகாப்பாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்" - தமிழிசை வாழ்த்து!!

 
tamilisai

பொங்கல் பண்டிகையையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் திருநாளில், தமிழகம்,புதுச்சேரி,தெலுங்கானா மக்களுக்கும் உலகத் தமிழர் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் திருவிழா, உழவுத் தொழிலுக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும பெருமை சேர்க்கும் திருவிழா. உழவு செழித்தால் உலகம் செழிக்கும்.

tamilisai

பொங்கலுக்கு மண் பானை, மண் சட்டி, மண் அடுப்பு என மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.  தைப்பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் எல்லா வளங்களும் பெருகி சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.

tamilisai

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் பாதுகாப்பாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். இந்த போகி நாளன்று கொரோனாவை முழுமையாக கொளுத்துவோம். டயர்கள் கொளுத்துவதைத் தவிர்ப்போம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளார்.