நூடுல்ஸ் பாக்கெட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்கள் பறிமுதல்!!

 
tn

கடந்த 9ம் தேதி மும்பை விமான நிலையத்தில் சுமார் 4.81 கோடி மதிப்பிலான தங்கத்தை உடல் உறுப்புக்களில் பதிக்க வைத்து கடத்த முயன்ற 6 பேர் மும்பை  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஆறு பேரிடம் இருந்து கடந்த ஆறாம் தேதி மற்றும் ஏழாம் தேதிகளில் ரூபாய் 4.81 கோடி மதிப்பில் ஆக 8.10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.  தங்களது ஆடைக்குள்ளும்,  உடல் உறுப்புக்குள்ளும் வைத்து அவர்கள் தங்கத்தை பதுக்கி வைத்து கடத்திச் செல்ல முயன்றனர்.

Gold

 தங்க சங்கிலி , ஒரு ரேடியம் முலாம் பூசப்பட்ட பதக்கம்,  ஒரு லாக்கெட் ஆகியவற்றை தனது உடலுக்குள் மறைத்து வைத்து ஒருவர் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.  மற்றொருவர் மலக்குடலுக்குள் முட்டை வடிவிலான ப்சூலில் தங்கம் மெழுகு என்னும் சாதனம் பொருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நூடுல்ஸ்  பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள், ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக  கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.