ரூ.80 கோடி போச்சு... நொடி பொழுதில் காணாமல் போன ‘பிரண்ட்ஷிப் பிரிட்ஜ்’

 
s

சீனா-நேபாள எல்லைப் பகுதியில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,300-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

Glacial lake flood destroys Nepal-China trade bridge, sweeps away two dozen  people

கடந்த ஆண்டு ரூ.80 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து கட்டப்பட்ட நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பிரண்ட்ஷிப் பிரிட்ஜ் என அழைக்கப்படும் இந்த பாலம் நொடிப்பொழுதில் வெள்ளத்தில் காணாமல் போனது. நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கைலாய யாத்திரைக்காக சீன எல்லைச் சாவடியில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் சென்ற 18 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கான காரணம் குறித்து குழப்பத்தில் ஆய்வாளர்கள் தவித்துவருகின்றனர். ரசுவா பகுதியில் பெருமழை எதுவுமே பெய்யாத நிலையில், இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது என குழப்பம் ஏற்பட்டுள்ளது. திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மண் சரிவு ஏற்பட்டு, பிரமாண்ட ஏரி உடைந்ததால் தான் வெள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.