லிப் ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை கார்களை பதித்து சர்ப்ரைஸ் செய்த காதலி!

 
லிப் ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை கார்களை பதித்து சர்ப்ரைஸ் செய்த காதலி!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியில் தனது காதலனின் காரில் சுமார் 3 மணி நேரம் செலவிட்டு லிப் ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை பதித்து சர்ப்ரைஸ் செய்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியை சேர்ந்த தனது காதலனின் காரில் சுமார் 3 மணி நேரம் செலவிட்டு லிப் ஸ்டிக்கால் 3,400 முத்தங்களை பதித்து சர்ப்ரைஸ் செய்த காதலியின் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலானது. லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்தனர். இந்த ‘Kissing Car’-இல் காதலன் ஆதித்யா சாலையில் வலம் வந்த காணொலி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் மோட்டார் வாகன விதிகளின் கீழ் ரூ.5,500 அபராதம் விதித்தனர். மேலும் காதலனின் கையாலேயே அந்த லிப் ஸ்டிக் மார்க்குகளை அழிக்க வைத்து பாடம் கற்பித்தனர். விசாரணையில் ஆதித்யா தாதிபூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இணையத்தில் வைரலாக இப்படி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தின் கதவு, பானட், பூட், தூண்கள் என கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு பாகத்திலும் முத்த வடிவத் தடங்களைப் பதித்தாள். இறுதியில், அந்த கார் முழுவதும் சுமார் 3,400 தனித்தனி உதட்டுத் தடங்களால் நிறைந்திருந்தது. இதற்காக ஆதித்யாவின் காதலில் சுமார் 900 ரூபாய் மதிப்பிலான லிப்ஸ்டிக் பயன்படுத்தியுள்ளார்.