குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாரும் ஊழலில் ஈடுபடவில்லை என்று பகிரங்கமாக கூறவில்லை.. எதிர்க்கட்சிகளை தாக்கிய பா.ஜ.க.

 
கவுரவ் பாட்டியா

மணிஷ் சிசோடியா, கவிதா மற்றும் தேஜஸ்வி ஆகியோரின் விஷயங்களை குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாரும் இந்த ஊழலில் ஈடுபடவில்லை என்று பகிரங்கமாக கூறவில்லை என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய செய்தி  தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: ஊழலில் ஈடுபட்டுள்ள பிராந்திய அரசியல் கட்சிகள் மத்திய அமைப்புகளின் விசாரணையை எதிர்கொள்ளும் போது பாதிக்கப்பட்ட அல்லது உணர்ச்சி விஷயங்களை பயன்படுத்துகின்றன. டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் இருக்கிறார், கே.கவிதாவை அமலாக்கத்துறை விசாரிக்கிறது, வேலைக்காக நிலம் தொடர்பான வழக்கில், பீகாரை சேர்ந்த தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. மணிஷ் சிசோடியா வழக்கில், சிசோடியாவின் காவல் விசாரணை அவசியம் என்ற நீதிமன்றம் கூறியது. இது அமலாக்கத்துறைக்கு நீட்டிக்கப்படும் ஒரு சாதகம் அல்ல. அரசியல் போட்டியும் இல்லை.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

மணிஷ் சிசோடியா அவ்வளவு நேர்மையாக இருந்திருந்தால், அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை?  இவற்றில் (டெல்லி மதுபான கொள்கை ஊழல், சட்டவிரோ பணப்பரிவர்த்தனை) எனக்கு சம்பந்தமில்லை, எனக்கு பாரத ரத்னா தர வேண்டும் என்று மணிஷ் சிசோடியா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மணிஷ் சிசோடியாக கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது. ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி மீது நடவடிக்கை எடுக்க நிதிஷ் குமாரும் கோரிக்கை விடுத்தார். இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் ஏன் பேசவில்லை?. எல்லாம் அரசியல் போட்டி என்கிறார்கள். பிறகு ஏன் நீதிமன்றத்திடம் இருந்து விலக்கு பெறவில்லை?

கவிதா

பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதாவிடம் அவருக்கும், புச்சிபாபுவுக்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மதுபான ஊழலின் மூளை அரவிந்த் கெஜ்ரிவால். கவிதா ஜி உங்களுக்கும் இண்டோஸ்பிரிட்ஸூக்கும், புச்சிபாபுவுக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் பொதுமக்களிடம் சொல்ல வேண்டும்.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாரும் இந்த ஊழலில் ஈடுபடவில்லை என்று பகிரங்கமாக கூறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.