வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்த சாப்ட்வேர் இன்ஜினியர்! வேலையை இழந்ததால் சோகம்

 
Ganja Addiction Costs Hyderabad Techie His Salary

ஐதராபாத்தில் கஞ்சாவுக்கு அடிமையான சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை இழந்த பிறகு  வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்ததை அறிந்து போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாச்சாரம் கிழக்கு காந்திநகரைச் சேர்ந்த சி.எச். சசிதர் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்த பணியின்   ஏற்பட்ட அறிமுகமான நண்பர்கள் மூலம்  கஞ்சாவுக்கு அடிமையான சசிதர்  பணி நேரத்தில் கஞ்சா பயன்படுத்தி வந்ததால், அவர் தனது சம்பளம் முழுவதையும் அதற்காகச் செலவழித்து வந்தார். அதற்கு அடிமையாகி பணியின் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அந்த  நிறுவனம் பணியில் இருந்து  நீக்கினர். இதனால் பணமில்லாத சசிதர் பணத்திற்காகவும் தனது சொந்த தேவைக்காக வீட்டின் மாடியில் கஞ்சா பயிரிடத் தொடங்கினார். இவரது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிந்த  கலால் போலீசார், அவரது வீட்டிற்கு சென்று  மாடியில்  வளர்க்கப்பட்ட 17 கஞ்சா செடிகள்  பறிமுதல் செய்து சசிதரை கைது செய்தனர்.