கேமிங் செயலிகளுக்கு தடை! மீறினால் ரூ.1 கோடி அபராதம்
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கும் புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட Promotion and Regulation of Online Gaming Bill 2025 என்ற மசோதாவின்படி, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ஆன்லைன் பண விளையாட்டு சேவை, பரிவர்த்தனை செய்வோருக்கு சிறை, அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது
இந்த துறையை கண்காணிக்க தேசிய அளவில் `National Online Gaming Commission' உருவாகிறது. e-Sports விளையாட்டுகளில், வெறும் பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் இந்த மசோதா அறிவுறுத்தியுள்ளது. புதிய மசோதாவின்படி, ஆன்லைன் பெட்டிங் கேம்க்கு விளம்பரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.


