ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு..

 
pm modi

ரஷ்யா - உக்கரைன் போருக்கு நடுவே ஹிரோஷிமாவில் உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி 7 உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு  ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்க உள்ளது. உலகிலேயே முதன்முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான இடம் என்பதால் அணு ஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிபாட்டை வலியுறுத்துவதற்கு சிறந்த இடமாக இது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.  அந்த வகையில் இன்று தொடங்க இருக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஓலா ஸ்கால்ஸ்,  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.

ஜப்பானில் ஜி7 உச்சி மாநாடு :  பிரதமர் மோடி பங்கேற்பு..

இந்நிலையில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா,  ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி  இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  அவ்வாறு சந்திப்பு நிகழும் பட்சத்தில்,  மோடி - ஜப்பான் பிரதமர் கிஷிடோவுடன்  தனியே இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபடவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹிரோஷிமாவில் பிரதமர் மோசி காந்தி சிலையை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது.  இன்று  தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச அரசியல், பிராந்திய பாதுகாப்பு,  பொருளாதார மற்றும் பருவநிலை சார்ந்த பிரச்சினைகள் பற்றி சர்வதேச தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.  இது தவிர உக்ரைன்  மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யாவுக்கு கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது,  சீனாவின் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்டவை  குறித்து ஆலோசிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.