டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவு

 
G20

டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த ஜி20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது. 

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. இன்று இரண்டாவது நாள் மாநாடு நடைபெற்றது. 

modi

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த ஜி20 உச்சி மாநாடு நிறைவு பெற்றது.  2024ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள G20 தலைமைப் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெறவுள்ளது.