ஜி20 உச்சி மாநாடு - உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி

 
tn

ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

tn

சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது.  அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு  நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன.  ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள்  உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். குடியரசுத் தலைவர் அளிக்கவுள்ள விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திர நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி 500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட உள்ளன.

tn

இந்நிலையில் இந்தியா தலைமையில் 18ஆவது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை முதல் நடைபெறவுள்ள நிலையில் நகரம் முழுவதும் சுமார் 1.30 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர்