ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்?- போலீஸ் விளக்கம்
டெல்லியில் மாணவா்கள் போராடும் ஜந்தா் மந்தா் பகுதியை சுற்றி FRS கேமராக்கள் பொருத்தப்பட்டது ஏன்? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஏஐ மூலம் இயங்கும் 360 டிகிரி கேமராக்கள் மூலம் முகங்களை அடையாளம் கண்டு ஆதார் விவரங்களை திரட்ட முயற்சிப்பதாக இணையத்தில் விவாதம் எழுந்தது. போராடும் மாணவா்களை உளவு பாா்க்க திட்டமிட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பலர் முகமூடி அணிந்து சுற்றி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் மாணவா்கள் போராடும் ஜந்தா் மந்தா் பகுதியை சுற்றி FRS கேமராக்கள் பொருத்தப்பட்டது ஏன்? என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவா்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கவே FRS கேமராக்கள் பொருத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. மாணவா்கள் போராட்டத்தை எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகள் கண்காணித்து வருவதால் முன்னெச்சாிக்கை நடவடிக்கை எனவும் போலீஸ் ்்தெரிவித்துள்ளது.

