காவி கொடியை 55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த மாஜி அமைச்சர்

 
m

கோவில் திருவிழாவில் தேரில் கட்டப்பட்டிருந்த காவி கொடியை 55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சுதாகர்.

கர்நாடக  மாநிலத்தில் சித்ர துர்கா மாவட்டம் செல்லகெரே தாலுக்காவில் நாயக்கனஹட்டி என்கிற கிராமத்தில் திப்பேருத்ரசாமி கோவில் அமைந்திருக்கிறது.  இந்த கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது . 

f

பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று வடம் பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.  தேர் மீது பழங்கள் எறிந்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி இருக்கிறார்கள்.

  இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  கோவில் தேரோட்டம் முடிந்ததும் தேரில் கட்டப்பட்டிருக்கும் பொருட்கள் ஏலம்  விடுவது வழக்கம் . அந்த வகையில் நேற்று தேரில் கட்டப்பட்டிருந்த காவி கொடி உள்ளிட்ட பொருட்களின் ஏலம் நடந்தது.

 தேரில் கட்டப்பட்டிருந்த காவிக்கொடியை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்,  இதனால் ஏலத்தின் விலை எகிறிது.   ஒவ்வொருவரும் விடாப்பிடியாக ஏலம் கேட்டு விலையை பல மடங்கு உயர்த்தினார்கள் . கடைசியாக 55 லட்சம் ரூபாய்க்கு பாஜக முன்னாள் அமைச்சர் சுதாகர் அந்த காவிக்கொடியை ஏலம் எடுத்து இருக்கிறார்.

 அம்பது லட்சம் ரூபாய் 55 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த காவி கொடியை வாங்கிச் சென்றிருக்கிறார் சுதாகர்.   இதை அடுத்து பல்வேறு பொருட்களும் ஏலம் விட போட்டி போட்டு ஏராளமானவர்கள் ஏலம் வாங்கிச் வாங்கி இருக்கிறார்கள்.