விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசியதால் பாதுகாப்பை குறைத்து விட்டார்கள்.. முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக்

 
சத்ய பால் மாலிக்

விவசாயிகள் பிரச்சினை மற்றும் மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்து பேசியதால் எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மீது  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: விவசாயிகள் பிரச்சினை மற்றும் மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் குறித்து பேசியதால் எனது பாதுகாப்பு பறிக்கப்பட்டது. இசட் ப்ளஸ் பாதுகாப்பு பதிலாக, தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இப்போது எனது பாதுகாப்பிற்காக நியமிக்கப்படுவார். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் போராட்டம்

நான் அரசியல் ஆள் இல்லை. ஆனால் எனக்கு ஏதாவது நேர்ந்தால், தயவு செய்து டெல்லிக்கு வாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2019ல்  சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீர் கவர்னராக  இருந்தபோது, 370வது சட்டப் பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு  ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றுல் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

அதற்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு, கோவாவின் 18வது கவர்னராக சத்ய பால் மாலிக் மாற்றப்பட்டார். அதன் பிறகு மேகாலயா கவர்னராக மாற்றப்பட்டார். 2022 அக்டோபர் வரை மேகாலயா கவர்னராக சத்ய பால் மாலிக் பதவி வகித்தார்.