மாஜி உள்துறை அமைச்சரின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரின் உறவினர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்ற சபாநாயகருமான சிவராஜ் பாட்டில் மராட்டிய மாநிலத்தில் லாத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகிலேயே நெருங்கிய உறவினரான சந்திரசேகர் என்கிற அனுமந்த் ராவ் பாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு வயது 81 .
சிவராஜ் பாட்டீலின் வீட்டுக்கு அடிக்கடி அந்த முதியவர் சென்று வந்திருக்கிறார். நீண்ட கால உடல் பிரச்சினையினால் அனுமந்த்ராவ் பாட்டில் மன அழுத்தத்தில் இருந்து வந்திருக்கிறார் . இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணி அளவில் அனுமந்த்ராவ் பாட்டில் அரையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. பதறி அடித்துக் கொண்டு குடும்பத்தின் சென்று பார்த்து இருக்கிறார்கள்.
அப்போது அனுமந்த்ராவ் பாட்டில் உடலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரின் மகனும் வீட்டில் இருந்து இருக்கிறார்.
தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , மூத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அனுமந்த்ராவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுட்டு மத்திய உள்துறை அமைச்சரின் உறவினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லாத்தூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.