ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதால் சாமானிய மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்

 
வாகனங்கள் விற்பனை சரிவால் கவலையில்லை- கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்….

ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சமூகத்தின் சாமானிய மக்களை பாதிக்காது என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். 


கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன்  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு சாமானிய மனிதன் ஏதாவது வாங்க வெளியே வரும் போது, உதாரணமாக ஒரு டீ விற்பனையாளரிடம் டீ ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அதற்கான பணத்தை பேடிஎம் மற்றும் போன்பே மூலம் உடனடியாக பரிவர்த்தனை செய்யலாம். இதனால் டீ விற்பனையாளருக்கு தனது பாக்கெட்டில் அல்லது கல்லா பெட்டியில் சில்லரை தேடும் சிரமம் இல்லை. 

இந்திய ரிசர்வ் வங்கி

அதேபோல காலையில் டீ கடைக்காரரிடம் பால் விநியோகம் செய்பவர் மாலையில் அந்த பணத்தை வாங்க வரும்போது இரண்டு தரப்பினரும் இப்போது சில்லரை  சிக்கலை சந்திக்க வேண்டியதில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் அவர்களுக்கு சில்லரை பிரச்சினையை சந்திக்க வேண்டியதில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை சாமானியர்களுக்கு  எளிதாக்கியுள்ளது. இதனால் பல சிரமங்கள் குறையும். நாடடின் ஒவ்வாரு பகுதியிலும் டிஜிட்டல் பணம் பயன்படுத்தப்படுகிறது. 

டிஜிட்டல் பரிவர்த்தனை

பி.சி.ஜி.ன் அறிக்கையின்படி, 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன. அனைத்து பரிவர்த்தனைகளில் 65 சதவீதம் அல்லது ஒவ்வொரு மூன்று பரிவர்த்தனைகளில் இரண்டு, மதிப்பின் அடிப்படையில் 2026க்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாமானியர்களால் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே வளரும், முன்னே செல்லும். எனவே ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சமூகத்தின் சாமானிய மக்களை பாதிக்காது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.