“இன்னும் எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு தொடரும்?”

 

“இன்னும் எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு தொடரும்?”

இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து மாநிலங்களிலும் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், தமிழகம், மகாராஷ்டிரத்தில் மட்டும் அதைத் தாண்டிய இடஒதுக்கீடு வழங்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது வரையிலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன.

“இன்னும் எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு தொடரும்?”

இச்சூழலில் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்க முந்தைய பாஜக அரசால் மசோதா கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர 16லிருந்து 12 சதவிகிதமாக குறைத்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசான அமர்வு விசாரித்துவருகிறது.

“இன்னும் எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு தொடரும்?”

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதாடினார். அப்போது வாதாடிய அவர், “கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அப்போதையை மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி தான் இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இட ஒதுக்கீடு கட்டாயமாகி சில வருடங்கள் தான் ஆகின்றன. இப்போதைய சூழ்நிலைக்கேற்ப இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும். அந்த அதிகாரத்தை மாநில அரசுகளிடம் கொடுக்க வேண்டும்” என்றார்.

“இன்னும் எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு தொடரும்?”
source: bar and bench

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், “இன்னமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தான் இடஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து இருக்கும்? நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான பின்னர் பல்வேறு நலத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தியுள்ளன. அப்படி இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னமும் முன்னேறவில்லை என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது” என்றனர். அதற்குப் பதிலளித்த ரோத்கி, “நாட்டில் இன்னும் பட்டினி சாவுகள் நிகழ்கின்றன. இந்திரா சஹானி தீர்ப்பு தவறு என்று சொல்லவில்லை. அந்த தீர்ப்பு வந்து 30 ஆண்டுகளாகிவிட்டன. மக்கள்தொகை கூடிவிட்டது. இந்தச் சூழ்நிலைக்கேற்ப இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுதான் கேட்கிறோம்” என்றார்.