"புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை" - உணவு பாதுகாப்புத்துறை

 
tn

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

tn

புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்புத்துறை பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

puducherry

 உணவு பாதுகாப்பு அதிகாரி  ரவிச்சந்திரன் கடந்த வாரம்  பஞ்சு மிட்டாய் வாங்கி சோதனை செய்தபோது  ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் புதுச்சேரி மற்றும், விழுப்புரம் மாவட்டம் எல்லையான கலைவன நகர் பகுதியில் ரசாயனம் கலந்த  பஞ்சு மிட்டாய்  உற்பத்தியாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து உற்பத்தி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.