பிரதமரை தொடர்ந்து முதல்வரும் பாதுகாப்பு வாகனத்தை குறைத்து கொண்டார்!

 
ச்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு வாகனத்தை 50 சதவீதம் குறைத்து கொண்டார்.

Image

அமெரிக்கா,  இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் மேற்கொண்டு  வருவதால் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும்  எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய மானியத்தின் காரணமாக தற்பொழுது நாடு முழுவதும் விலையெற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும் இன்னும் சில நாட்களில் விலை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக  கொரோனா காலகட்டத்தை பின்பற்றி வீட்டில் இருந்து பணி செய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

இதனை ஏற்று பல நிறுவனங்கள் அதற்கு உண்டான மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தனக்கு உண்டான பாதுகாப்பு கான்வே வாகனத்தை குறைத்து இரண்டு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது புரோட்டோக்கால்   பின்பற்றியவாறே  தனது வாகன அணிவகுப்பை 50 சதவீதத்திற்க்கும் மேலாகக் குறைத்து 11 வாகனங்களுக்கு பதிலாக வெறும் 4 வாகனங்களாக மட்டுப்படுத்தியுள்ளார். இசட் -பிரிவு பாதுகாப்பு இருந்தபோதிலும், அமைச்சர் நாரா லோகேஷும் தனது வாகன அணிவகுப்பை 50 சதவீதம் குறைத்து, தற்போது வெறும் 2 கார்களை மட்டுமே பயன்படுத்தி உண்டவல்லி இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்கு  சென்றனர். துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இதனை அனைத்து அமைச்சர்களும், கட்சியினரும், அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.