நேபாளத்தில் சீறிப்பாய்ந்து வரும் வெள்ளம்- அதிர்ச்சியூட்டும் காணொலி

 
ச்

நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 105 இந்தியா்கள் உட்பட 291 வெளிநாட்டவா்கள் மாயம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


அண்டை நாடான நேபாளத்தில் திபெத் எல்லைப் பகுதியிலிருந்து பாயும் போட்டே கோசி ஆற்றில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது.போட்டே கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக ராசுவா பகுதியில் காணாமல்போன 384 சுற்றுலா பயணிகளில் 100க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். இதில் சிக்கிய சுமார் 105 இந்தியர்களை காணவில்லை என அந்நாட்டு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இதேபோல் வெள்ளத்தில் சிக்கிய 111 சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 105 இந்தியா்கள் உட்பட 291 வெளிநாட்டவா்கள் மாயம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் அங்குள்ள பாதுகாப்புப்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

திமூர் மற்றும் சியாப்ரு பகுதிகளில் வெள்ளத்தின் வேகம் அதிகரித்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் தமிழர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இந்திய யாத்ரீகர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதால் யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளம் - திபெத் எல்லை வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு எற்பட்டுள்ளது.