மும்பையில் ஆட்டோமொபைல் ஷோரூமில் திடீர் தீ விபத்து!

 
தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள போவாய் நகரிலுள்ள ஆட்டோமொபைல் ஷோரூமில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சகி விஹார் சாலையில் அமைந்துள்ள சாய் ஆட்டோ ஹூண்டாய் ஆட்டோமொபைல் ஷோரூமில் தான் இன்று காலை 11 மணிக்கு தீ விபத்து உண்டாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் ஷோரூமில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

VIDEO: पवईतील कार सर्व्हिस सेंटरला भीषण आग; कोट्यवधींच्या गाड्या जळून खाक -  Marathi News | Fire Breaks out in the Garage of an Automobile Company in  Powai | Latest mumbai News at Lokmat.com

அதேபோல யாருக்கும் எந்தவித காயமும் உண்டாகவில்லை. தகவலறிந்த உடன் ஐந்து தீயணைப்பு வாகங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஒருவேளை மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விபத்து நடந்த பகுதிக்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வாரம் மும்பையில் நிகழும் இரண்டாவது தீ விபத்து இதுவாகும். சர்வதேச எலக்ட்ரானிக்  நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.