மோடி நாளை திறந்து வைக்க இருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

 
a

ராஜஸ்தானில் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க இருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video: Fire At Rajasthan Refinery Day Before Its Inauguration By PM Modi

ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டுள்ளது. பச்பத்ரா என்ற அந்த ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க இருந்தார். இந்நிலையில் திடீரென பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையின் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆலை அருகே வசிக்கும் மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். HPCL நிறுவனம் அமைத்துள்ள இந்த ஆலைக்கு அதானியின் முத்ரா துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் கச்சா எண்ணெய்யை கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


.