பணியில் இருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 
police suicide

அன்னமய்யா மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

అన్నమయ్య జిల్లాలో దారుణం - తుపాకీతో కాల్చుకుని ఏఆర్‌ మహిళా కానిస్టేబుల్  ఆత్మహత్య - AR woman constable shoots herself

ஆந்திர மாநிலம் அன்னமய்யா  மாவட்டம்   மதனப்பள்ளியை தஸ்தகிரி புங்கனூர் போலீஸ் அகடமியில் காவலர் பயிற்றுன்ராக பணி புரிந்து வருகிறார். இதே பயிற்சி மையத்தில் புங்கனூர் அடுத்த பன்கனப்பள்ளியை  சேர்ந்த வேதவதி 26 போலீசாக தேர்தெடுக்கப்பட்ட  பயிற்சி பெறும்போது தஸ்தகிரியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இருவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர்  சித்தூரில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்த வேதவதி, ஓராண்டுக்கு முன், அன்னமையா மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு மாறுதலாகி வந்தார். தற்போது, ​​ராயச்சோட்டி நகரில் உள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு அருகே  உள்ள இந்திரம்மா காலனியில் தஸ்தகிரியுடன் வேதவதி வசித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேதவதி ராயசோட்டியில் உள்ள  எஸ்.பி. செண்ட்ரி பணியில் இருந்தார். மதியம் திடிரென துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கிருந்த சக போலீசார் சென்று பார்க்கும் போது வேதவதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனடியாக  உடல் ராயசோட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  உண்மையில் வேதவதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது துப்பாக்கி தவறுதலாக சுட்டு கொண்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.