அனுமன் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் போஸ்! வலுக்கும் பாஜக - காங்., மோதல்

 
ha

அனுமன் கட் அவுட் முன்பாக பெண் பாடி பில்டர்ஸ்  போஸ் கொடுத்த விவகாரத்தில் பாஜக -காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. 

 மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லம் என்கிற பகுதியில் கடந்த மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் பாடி பில்டிங் போட்டி நடந்தது.   பாஜக  பாஜக எம்எல்ஏ சைதன்ய காஷ்யப் ஆதரவுடன் பாஜக மேயர் பிரஹ் லாத் பட்டேல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   நிகழ்ச்சியில் பெண்கள் பாடிபில்டர் அனுமன் கட் அவுட் முன்பு போஸ் செய்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகின.  

ha

இது அநாகரிக்க செயல் என்று குறிப்பிட்ட காங்கிசார்,  கங்கை புனித நீர் அனுமன் மந்திரங்களை வைத்து சுத்திகரிப்பு செய்தனர்.   சம்பந்தப்பட்டவர்களை அனுமன் தண்டிப்பார் என்றும் கூறினார்கள் .  இதை அடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம் மாநில காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


 இது  இந்துக்கள் கடவுள் அனுமனை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி இருக்கிறார் சமாதிவாதியின் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.   இந்த வீடியோ வைரல் ஆவதை பகிர்ந்து மத கடவுள்களை பாஜக அவமதிக்க அவமதிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 காங்கிரசின் குற்றச்சாட்டு பதில் அளித்திருக்கும் பாஜக செய்தி தொடர்பாளர் ஹிடேஷ் பாஜ்பாய்,   பெண்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை. சில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காங்கிரஸுக்கு வந்து விட்டார்கள் . பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.  அவர்களுக்குள் இருக்கும் சாத்தான்தான் இதனை இப்படி பார்க்கிறது.   விளையாட்டு களத்தில் உள்ள பெண்களை அவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றார்கள்.   இதற்கு அவர்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டிருக்கிறார்.