மத்திய அரசின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தம்!

 
biometric

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்  மத்திய அரசின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. 

biometric

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று  தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ளது. இதன் காரணமாக டெல்லி, மேற்கு வங்காளம் , அரியானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்தியாவில் இதுவரை 1700 பேர்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 510 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை 639 பேர் தொற்றிலிருந்து குணமாகி உள்ளனர். இருப்பினும் கொரோனா  பரவல் காரணமாக மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

biometric

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் , அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக நிறுத்தப்படுகிறது.  மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.