கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு பயந்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

 
supreme court

நீட் மாணவர் போராட்ட எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.

நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான FIR-ஐ ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு அளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துனர் இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியதை அடுத்து போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளன.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ  பயன்படுத்தி, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எஃப்.ஐ.ஆர்-களையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை நாளையே விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். நீட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான FIR-ஐ ரத்து செய்யாததால் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தப் போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்த நிலையில் மத்திய அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.