‘சொத்தை பிரித்தால்தான் தந்தைக்கு இறுதி சடங்கு’- கொடூர மகன்களால் 3 நாட்களாக காத்திருந்த உறவினர்கள்

 
x

சொத்தை பிரித்தால் தான் தந்தையின் சடலத்திற்கு இறுதி சடங்கு நடைபெறும் என இரண்டு மகன்கள் பிரச்சனையால் மூன்று நாட்களாக உறவினர்கள் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் மோட்குரு மண்டலம் சதர்சபுரம் கிராமத்தை சேர்ந்த  பாலய்யா -  லிங்கம்மா தம்பதிக்கு நரேஷ், சுரேஷ் என்ற இரு மகன்களும், ஷோபா, சோனி என்ற இரு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், அவரவர் குடும்பத்துடன் உள்ளனர். இந்நிலையில்  லிங்கம்மாவும், அவரது மூத்த சகோதரர் ராமுலுவும் சேர்ந்து  சூர்யாபேட்டை மாவட்டம், திருமலகிரி மண்டலம், தட்டிப்பமுலா கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இதில் அவர்கள்  இருவர் சேர்ந்து அரை ஏக்கர் நிலத்தை விற்றனர்.  மீதமுள்ள நிலத்தில் ராமுலு தங்கை லிங்கம்மா மற்றும்  தனது மகள் லிங்கம்மா  மூத்த மருமகள் (மூத்த மகன் நரேஷ் மனைவி அருணா) பெயரில் எழுதி   பட்டா செய்து கொடுத்தார். இதனால் அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என இளைய மகன் சுரேஷ் வற்புறுத்தி வந்தார். 

இந்நிலையில் பாலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு நான்கு நாட்கள் முன்பு இறந்தார். தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் இறுதி சடங்கில் பங்கேற்க வந்தனர். ஆனால் இறுதி சடங்கு செய்ய வேண்டுமென்றால் சொத்தை பிரித்து தர வேண்டும் என  சகோதரர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்து ஏற்பட்டது. இதனால் தந்தையின் உடல் மூன்று நாட்களாக இறுதிச் சடங்குகள் செய்யாமல் பிரிஜர்  பாக்சில் வைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு சகோதரர்கள் இருவரும் இறந்த தந்தை பாலையாவை வாகனத்தில் அழைத்துச் சென்று தந்தை பெயரில் இருந்த 12 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் பிரித்து பதிவு செய்தனர். இப்போது ஒரு ஏக்கர் நிலத்திற்காக இரண்டு மகன்களும் மீண்டும் சண்டையிட்டு கொண்டனர். 

ஆந்திரப் பிரதேச செய்திகள் நேரலை நவம்பர் 21, 2024: ஆந்திரப் பிரதேச சுற்றுலா : பிபிபி மோடலில் டூரிஜம் வளர்ச்சி

கணவரின் மரணத்தால் துக்கமடைந்த மனைவி லிங்கம்மா மகன்கள் சண்டையால்  என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்களாக  கணவரின் சடலத்தால் பார்த்து கதறி அழுதார்.  தகனம் முடிந்ததும், பேசி கொள்ளலாம் என  உறவினர்கள்  கூறினாலும் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் ஊர் பெரியவர்கள் இறந்த உடலை இறுதி சடங்கு செய்யாமல் ஊரில் வைத்திருந்தால் அது ஊருக்கும் , உங்கள் குடும்பத்திற்கும் நல்லதல்ல எனக்கூறியும் கேட்கவில்லை. இதனால் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மூன்று நாட்களாக துக்கவிட்டிலேயே தங்கி இருந்தனர்.  இந்த விவகாரம்  போலீஸாருக்குத் தெரிய வந்ததையடுத்து, ராமண்ணாப்பேட்டை சி.ஐ. வெங்கடேஷ்வர்லு, மோட்கூர் எஸ்.ஐ நாகராஜு போலீஸாருடன் சனிக்கிழமை கிராமத்துக்குச் சென்று மோதல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்தனர். பின்னர்  இரு மகன்கள் மற்றும் மருமகள்களிடம் பேசி இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும், இல்லையெனில் பஞ்சாயத்து  ஊழியர்களைக் போலீசாரே   நடத்துவோம் என எச்சரித்தனர். 

இதனையடுத்து லிங்கம்மாவின் மூத்த மருமகள் பெயரில் ராமுலு எழுதி கொடுத்த   ஒரு ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய ஊர் பெரியவர்களிடம் போலீஸார் பேசி  ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னர்  பஞ்சாயத்து முடிந்தது. இறுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை இறுதிச் சடங்கு நடைபெற்றது. சொத்துக்காக தந்தையின் இறுதிச் சடங்குகளை மூன்று நாட்களாக செய்யாத பாலையாவின் மகன்களின் நடத்தையை உறவினர்களும், கிராம மக்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.