கடனை கட்ட சொல்லி தொல்லை... வங்கி முன் விவசாயி தற்கொலை

 
s

தெலுங்கானாவில் கடன் தவணையை திருப்பி செலுத்த கோரி வங்கி அதிகாரிகள் விவசாயிக்கு கொடுத்து அழுத்ததால் விவசாயி வங்கிக்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Adilabad: బ్యాంకులోనే రైతు బలవన్మరణం | Farmer Commits Suicide in Adilabad  Due to Bank Harassment

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம், பேலா மண்டலம், ரேனிகுடாவைச் சேர்ந்த விவசாயி ஜாதவ் ஜாகோராவ், ஆதிலாபாத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தனது ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ.3.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 25,000 தவணையாக செலுத்த வேண்டும். ஆனால்  கடந்த இரண்டு தவனைகளை ஜாதவ் ஜாகோ ராவ் தவணை செலுத்தவில்லை. சரியான நேரத்தில் தவணை செலுத்தாததற்காக வங்கி அதிகாரிகள் ஜாதவ் ஜாகோ ராவ் மீது பணம் கட்டும்படி அழுத்தம் கொடுத்தனர்.  

வங்கி அதிகாரிகளின் கடன் தவணைக்காக கொடுத்த தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த ஜாகோ ராவ் பூச்சி மருந்துடன்  வங்கிக்கு சென்ற அவர் வங்கி அதிகாரிகள் முன் பூச்சி மருந்தை குடித்தார். இதனை கவனித்த வங்கி அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர் பூச்சி மருந்தை குடித்து அங்கேயே உட்கார்ந்து போராட்டம் செய்தார். இந்த நிலையில் மற்றவர்கள் அவரை வெளியில் கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டார் என்று அறிவித்தனர். தகவல் அறிந்து வங்கிக்கு வந்த அவருடைய உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 

கோடிகளில் கடன் வாங்கி கடனை செலுத்தாமல் இங்கே அரசியல் போர்வையில் சுற்றி வருவபர்கள் மீதும், வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் கடனை அரசு வாரா கடன் என தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் ஊருக்கே சோறுபோட வேண்டும் என்று விவசாயம் செய்யும் விவசாயிகள், கல்வி கடன் என லட்சத்தில் பெற்றவகளை கடன் தவனை கட்ட முடியாத அவர்களையும் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தி பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தொடர்கதையாக நடந்து வருகிறது.