தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி மீது கழன்று விழுந்த மின்விசிறி

 
Tirupathi

ஆந்திராவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள ஹேமாண்டி கிராமத்தில் இருக்கும் விஞ்ஞான் அரசு பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி ஒருவரின் தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி, திடீரென்று கழன்று விழுந்தது. இதில் மாணவியின் கண்ணுக்கு கீழ் மின்விசிறியின் இறக்கை பட்டதில், அவர் லேசான காயமடைந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சைக்கு பின்னர் மாணவி மீண்டும் தேர்வெழுதினார். மின்விசிறி முறையாக பொருத்தப்படாததால் கழன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடைபெறுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tirupathi

இதனை தொடர்ந்து அந்த பள்ளிக் கூடத்தில் உள்ள தேர்வு அறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விசிறிகளும் நேற்று ஒரு முறை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது மின்விசிறி திடீரென கழன்று விழுந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.