விவசாய நிலத்தில் கிடந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள்! தெலங்கானாவில் பரபரப்பு

 
Telangana

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் விவசாய நிலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Damaracharla mandal, Nalgonda district, counterfeit cash notes, agriculture field

தெலங்கான மாநிலம் நல்கொண்டா மாவட்டம் டமராச்செர்லா மண்டலத்தில் உள்ள போட்டலா பாலேம் கிராமத்தில்நர்கெட் பல்லி - அடங்கி சாலையில் ஒரு விவசாயியின் வயலில் ரூபாய் நோட்டு கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. விவசாயிகள் வயல்களில் ரூபாய் நோட்டு கட்டுகளுடன்  பையைக் பார்த்ததும் விவசாயிகள் யாரோ ஒரு பை நிறைய ரூபாய் நோட்டுகளை  விட்டுச் சென்றிருப்பதாக சந்தேகித்தனர். அதில் ரூ.500  நோட்டுகளின் 40 கட்டுகளைப் பார்த்த விவசாயிகள், சில ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றனர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும்  விவரங்களை சேகரித்து, மீதமுள்ள ரூபாய் நோட்டு கட்டுகளை கைப்பற்றினார். தோற்றத்தில் அசல் ரூபாய் நோட்டுகளை போன்று இருக்கும் இந்த ரூபாய் நோட்டுகளில், இந்திய குழந்தைகள் வங்கி என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன. எனவே இந்த ரூபாய் நோட்டு கட்டுகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பயிர் வயல்களில் கள்ள ரூ.500 நோட்டுகள் கண்டறியப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இது கள்ளநோட்டு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டமராசர்லா மண்டலத்தில் கடந்த காலங்களில் கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்ட  சம்பவங்கள் நடந்துள்ளன. அதே கும்பல் மீண்டும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே போலீசார் கிராம மக்களையும் தொடர் கண்காணிப்பில்  ஈடுப்பட்டு கள்ள நோட்டு எப்படி அங்கு வந்தன?அவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நோட்டுகள் குழந்தைகள் விளையாடவும், பள்ளிகளில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவ்வளவு அதிக அளவில் ஒரே மாதிரியான ரூ.500 நோட்டுகள் இருப்பது கள்ள நோட்டுகளை வைத்து யாரையே ஏமாற்ற திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.