"என்னை தொடர்பு கொள்ளுங்க... முதல்வரை சந்திக்க அழைத்து செல்கிறேன்”- வீடியோ போட்ட இளைஞர் கைது

 
ட்

தெலங்கானா தலைமை செயலகத்தில் காவலராக இருப்பதாகவும் முதல்வர் சந்திக்க வேண்டும் என்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படி இன்ஸ்டா வீடியோ போட்டா இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Fake cop inside Telangana Secretariat: Man promises access to CM in Instagram  reel, arrested

தெலங்கானா மாநில தலைமை செயலகத்தில் வளாகத்தில் நின்று கொண்டு  காவலர் உடையில் செல்பி வீடியோவில் நான் முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பணி புரிவதாகவும் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த இளைஞர் குறித்து போலீசார் விசாரித்ததில்  காவலர் உடையில் இருந்தது தத்தூரி ரவி என்கிற சரண் யாதவ் (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காவல்துறை மீதுள்ள ஈர்ப்பு காரணமாக வாடகைக்கு காவலர் உடை வாங்கி இன்ஸ்டா  ரீல்ஸ் செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவலர் சீருடை, ஒரு மொபைல்  பறிமுதல் செய்தனர். பிஎன்எஸ் பிரிவுகள் 204, 205, 319, 318(4), 353 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-டி. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இத்தகைய ஆள்மாறாட்டக்காரர்களிடம் ஏமாறாமல், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீசார்  கேட்டுக்கொண்டுள்ளனர்.