கருத்துக்கணிப்புக்கு பின்னால் பாஜக... மீண்டும் நாங்களே ஆட்சியமைப்போம்- மம்தா பானர்ஜி நம்பிக்கை
மேற்கு வங்க மாநிலத்தில் 226 தொகுதிகளுக்கு அதிகமாக வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

எப்போதுபோல் கருத்துக்கணிப்புகளை நிராகரிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க மாநிலத்தில் 226 தொகுதிகளுக்கு அதிகமாக வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜகவால் கருத்துக்கணிப்பு வழிநடத்தப்படுகிறது. ஆகவே மேற்குவங்கத்தில் நமது ஆட்சி அமையும். நாங்கள் கருத்துக்கணிப்புகளை நிராகரிக்கிறோம். 294 தொகுதிகளில் 226 தொகுதிகளுக்கு மேல் பெற்று ஆட்சியை தக்க வைப்போம். என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்பு படையினர் மிக மோசமாக நடந்து கொண்டனர். தாய், தாய்நாடு, மக்கள் என்ற கொள்கைப்படி ஆட்சி புரிவோம்” எனக் கூறியுள்ளார்.

