பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்பி!

 
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்பி!

தெலங்கானா மாநில முன்னாள் எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான விவேகானந்த பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 30 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். காங்கிரஸ், பாஜக  சார்பில் கடும் போட்டியுடன் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்தந்த கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் கட்சியில் இணைத்து பலத்தை கூட்ட வியுகம் வகுத்து வருகின்றனர். இதற்காக கட்சி தாவல் தினந்தோறும் நடந்து வருகிறது. 

இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும் மூத்த அரசியல்வாதியுமான நாகம் ஜனர்தனரெட்டி காங்கிரசில் இருந்து விலகி ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியில் முதல்வர் சந்திரசேகர் ராவ் முன்னிலையில் ஆதரவாளர்களுடன்  இணைந்தார். இந்நிலையில் முன்னாள் எம்.பி.யும் பாஜக மூத்த தலைவருமான விவேகானந்தா பாஜகவில் இருந்து விலகுவதாக  மாநில தலைவர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து பல கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் வசம் கொண்டு வர காங்கிரஸ் - பி.ஆர்.எஸ்  தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தெலங்கானாவில் தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரத்துடன் ஒருவரை ஒருவர் விமர்சனங்கள் செய்து வருதால் பரபரப்பாக மாறி உள்ளது.