சிறையில் இருந்த மாஜி ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

 
sந்

தங்க கடத்தல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி செய்து வருகிறார்கள்.  இவர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்தில் அரபு அமீரகத்தின் துணை தூதரகம் இயங்கி வருகிறது.

 கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த அலுவலகத்திற்கு வந்த பார்சலில் தங்க கடத்தல் நடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்று இருக்கிறது . இதை அடுத்து போலீஸ் அடையாள அட்டையுடன் அமீரகத்திற்கு வந்த பார்சலை பெற வந்துள்ளார் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஷரீத் குமார்.   சுங்கபுலனாய்வுத் துறையின் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்  அவர்,  ஸ்வப்னா  சுரேஷ் என்ற பெயரை உச்சரித்து இருக்கிறார்.

சி

 இதை அடுத்து பார்சலை விடுவிக்க பெரும் அழுத்தம் கொடுத்து முயற்சி செய்த ஷ்வப்பனா சுரேஷ்,  மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வரிசையாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் 98 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சிவசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்டார். 

 சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் அமலாக்கத்துறை சிவசங்கரை கைது செய்திருந்தது.  தங்கக் கடத்தல் வழக்குடன் கருப்பு பணம் பரிமாற்றம், டாலர் கடத்தல் வழக்கு, கேரளா அரசின் லைப் மிஷின் திட்டத்தில் ஊழல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு முன்னதாக ஷ்வப்பனா சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 எர்ணாகுளம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவசங்கரை ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை தன் கஸ்டடியில் எடுத்து விசாரித்து விட்டு மீண்டும் கைது செய்தது.  இந்த முறை கைதான போது சிவசங்கரை வரும் 21ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் சிறையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிவசங்கரை கொச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்துள்ளனர்.