ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் பாதிப்பில்லை..!! இந்தியாவின் ப்ளானே வேற - அமைச்சர் விளக்கம்..

 
ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் பாதிப்பில்லை..!! இந்தியாவின் ப்ளானே வேற - அமைச்சர் விளக்கம்.. ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் பாதிப்பில்லை..!! இந்தியாவின் ப்ளானே வேற - அமைச்சர் விளக்கம்..

 ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு இல்லை என இந்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.  

மத்திய கிழக்கு நாடுகள் உற்பத்தி செய்யும் எண்ணையை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் முக்கிய நீர்வழிப் பாதையாக ஹார்மூஸ் நீரிணை இருந்து வருகிறது. பாரசீக வளைகுடா மற்றும்  ஓமன் வளைகுடாவை இணைக்கும் இந்த ஜலசந்தியின் மிகக் குறுகிய பாதை வெறும் 33.8 கிலோ மீட்டர் (21 மைல்) அகலம் கொண்டது. இரு திசைகளிலும் இதன் பயணப் பாதை 3 கிலோமீட்டர் அகலம் மட்டுமே.   இந்த குறுகிய பாதையின் வழியாகத்தான் உலகின் 20 சதவீத எண்ணெய் நுகர்வுக்கான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. உலகிலேயே திரவ இயற்கை வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் நாடானா கத்தார் கூட, இந்த  நீரிணையின் வழியாகவே பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் பாதிப்பில்லை..!! இந்தியாவின் ப்ளானே வேற - அமைச்சர் விளக்கம்..

இந்தியாவிற்கும் கூட இந்த ஹார்மூஸ் நீரிணை மிக முக்கியமான பங்காற்றுகிறது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக மத்திய கிழக்கில் உள்ள ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன் நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் 47 சதவீதம் கச்சா எண்ணெய் ஹார்மூஸ் கால்வாய்  வழியாகவே இந்திய துறைமுகங்களை வந்தடைந்தது.  ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் அறிவித்திருக்கிறது.  இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அந்நாட்டின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலிடம் உள்ள நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஹார்மூஸ் ஜலசந்தியை மூடினாலும் பாதிப்பில்லை..!! இந்தியாவின் ப்ளானே வேற - அமைச்சர் விளக்கம்..

ஏற்கனவே ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதல் தொடங்கியதுமே கடந்த வெள்ளிக் கிழமையன்றே  ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7% உயர்ந்து, ஒரு பீப்பாய் 74 அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.  தற்போது  ஹார்மூஸ் நீரிணையை மூடப்போவதாக ஈரான் எச்சரிப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த இரண்டு வாரங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், கடந்த சில வருடங்களாகவே நாங்கள் எங்கள் விநியோகத்தை பன்முகப்படுத்தி இருக்கிறோம். அதனால், எங்கள் விநியோகத்தில் பெரும்பாலானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதில்லை. எங்கள் எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் பல வாரங்களுக்கு தேவையான இருப்பு உள்ளது. மேலும், பல வழிகளில் இருந்து தொடர்ந்து எரிசக்தி விநியோகத்தைப் பெற்று வருகிறோம். எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.