"இன்ஸ்டாகிராமில் அதிகளவில் Active-ஆக இருங்கள்.."- அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

 
d

இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ரீல்ஸ்களை உருவாக்கி பகிர வேண்டும் என ஒன்றிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

என்டிடிவியில் சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள்

சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பெரும்பாலும் மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் முகாமிட்டுள்ளனர். ஜூலை 20 அன்று, மழைக்கால கூட்டத்தொடரின் போது போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றதை அடுத்து, காவல்துறையின் நடவடிக்கையில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளைக் கையாள விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட முன்வரவில்லை. சிஜேபி தலைவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தை முன் நின்று நடத்தும் சிஜேபி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 


டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஜென் Z தலைமுறையினரின் மாபெரும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துவருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி,  கோடிக்கணக்கான Gen Z இளைஞர்கள் இன்ஸ்டா செயலியை பயன்படுத்துவதால், அரசின் சாதனைகளை விளக்கவும், அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கவும் தீவிரமாக ரீல்ஸ்களை உருவாக்க அறிவுறுத்தியுள்ளார்.