தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் நடவடிக்கை..

 
kavitha -  கவிதா


டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே இந்த புகாரின் அடிப்படையில்  டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா,  நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்..  டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் நடவடிக்கை..

டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ தனியாகவும்,  அமலாக்கத்துறை சார்பாக தனியாகவும்  வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இதில்  அமலாக்கத்துறையை பொறுத்தவரையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முன்னதாக  இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டவர்களில் ஒருவரான அமித் அரோவிடம் அண்மையில் நடைபெற்ற விசாரணையில், அவர் கவிதாவின் பெயரை குறிப்பிட்டதால்  அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை,  நாளை ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.  இந்நிலையில்  மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக டெல்லியில் மார்ச் 10-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த  கவிதா சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தச் சூழலில்  அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.