3ஆவது முறையாக பிரதமர் - மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

 
tn

தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு X தள நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

modi

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருகிற 9 ஆம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.


இந்நிலையில்   மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில்,  X தள நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் நரேந்திர மோடி! இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன" என்று என்று பதிவிட்டுள்ளார்.