ஜார்க்கண்ட் அமைச்சர் உதவியாளரின் வீட்டில் குவியலாக கிடைத்த பணம்!!

ஜார்க்கண்ட் அமைச்சர் உதவியாளரின் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான ரொக்கம் குவியலாக கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலாம் கிர் ஆலன் பல்வேறு முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிந்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்களும் இருப்பதால் இந்த வழக்குகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது.
ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலாம் கிர் ஆலன் உதவியாளர் சஞ்சீவ்லால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது . இதில் குவியலாக சுமார் 20 கோடி முதல் 30 கோடி வரையிலான ரொக்கப் பணம் கிடைத்துள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை கண்டறிய ஏராளமான பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டன.
This mini mountain of cash is recovered from the servant of the personal secretary to Alamgir Alam (rural development minister of Jharkhand)
— Mr Sinha (Modi's family) (@MrSinha_) May 6, 2024
Jharkhand is poor but INDI alliance gang is sleeping on golden beds... pic.twitter.com/TOdtlF9uIV
அனைத்து பணமும் எண்ணி முடிக்க பல மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை பின்னரே தெரியவரும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.