#BREAKING அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துகள் பறிமுதல்
வங்கி கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.1120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL), ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் (RCFL) மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பான வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் 18-க்கும் மேற்பட்ட சொத்துக்கள், நிலையான வைப்புத்தொகைகள், வங்கி இருப்பு உள்ளிட்டவற்றை அமலாக்க இயக்குநரகம் (ED) தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் ஏழு சொத்துக்கள், ரிலையன்ஸ் பவர் லிமிடெட்டின் இரண்டு சொத்துக்கள் மற்றும் ரிலையன்ஸ் வேல்யூ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒன்பது சொத்துக்கள் அடங்கும். இதுவரை ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.


