ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி முகவர்கள் கடத்தல்!

 
ஆந்திரா

ஆந்திராவில் தேர்தல் தொடங்கும் முன்பே தெலுங்கு தேச கட்சி முகவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே போலீசார் கண்டுபிடித்து வாக்கு மையத்திற்கு அழைத்து வந்தனர். 

The Telugu Desam Party (TDP) had alleged that their rival party YSRCP has kidnapped its polling agents just before the Lok Sabha and assembly elections began in the state.

ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சித்தூர் மாவட்டம் புங்கனூர் தொகுதியில் சதும் மண்டலம் பொரகமண்டாவில் அமைக்கப்பட்டுருந்த வாக்கு மையத்தில் நியமிக்கப்பட்ட 3 தெலுங்கு தேச கட்சி முகவர்களை வரும் வழியில் சிலர் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தெலுங்கு தேச கட்சி பொறுப்பாளர் ஜெகன் மோகன் ராஜு அளித்த புகாரின் அடிப்படையில் பீலேருவில் கடத்தப்பட்ட  முகவர்கள் இருப்பதை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக அழைத்து வாக்கு மையத்தில் அமர வைத்ததாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்தார். இவர்களை கடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என்றும் அவர் கூறினார்.